கரையோர மார்க்க மூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காலி, ஜிந்தோட்டை பகுதியில் இன்று (01) அதிகாலை ருஹுணு குமாரி ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கரையோர ரயில் பாதையில் கொழும்பில் இருந்து பூஸ்ஸ மற்றும் காலி முதல் கஹாவ வரை பயணிக்கும் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.














