உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தார்.
உலகத்தமிழர் மாநாடு தொடர்பாக இலங்கை வாழ் தமிழர்களை தெளிவூட்டும் ஊடகச்சந்திப்பு இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.














