புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் (FSU) ஒரு பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரி என்று கூறப்படும் 20 வயதுடைய FSU மாணவர் பீனிக்ஸ் இக்னர், மாநிலத் தலைநகரான டல்லாஹஸ்ஸியில் உள்ள மாணவர் சங்கக் கட்டிடத்திற்கு அருகில் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
இறந்தவர்கள் மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழக வளாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



















