துப்பாக்கிச் சூடு நடத்தி இரட்டைக் கொலைக்கு உதவியதாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி மீட்டியாகொட, தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்டியாகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 27, 40 மற்றும் 44 வயதுடைய மீட்டியாகொட மற்றும் கஹாவ பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














