இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் மெதுவான அசைவுகள் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 11ஆம் திகதியும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.














