பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் அனைவரும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.














