பிரேசிலின் எல்லா காலத்திலும் முன்னணி கோல் அடித்த வீரரான நெய்மர், சாண்டோஸ் கழகத்துடனான தனது ஒப்பந்தத்தை எதிர்வரும் டிசம்பர் வரை புதுப்பித்துள்ளார்.
33 வயதான அவர் சவுதி புரோ லீக் அணியான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஆறு மாத ஒப்பந்தத்தில் பிரேசிலிய கழகத்துக்கு திரும்பினார்.
நெய்மர் சாண்டோஸுக்காக 243 போட்டிகளில் விளையாடி 141 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 69 அசிஸ்ட்களை (கோல் அடிக்க உதவுதல்) செய்துள்ளார்.
மேலும் அவர், பிரேசிலுக்காக 128 போட்டிகளில் விளையாடி 79 கோல்களை அடித்துள்ளார்.
ஆனால் 2023 ஒக்டோபரில் உருகுவேவுக்கு எதிரான போட்டியில் முழங்கால் காயம் ஏற்பட்டதிலிருந்து தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.



















