பூமி இன்று (ஜூலை 22) வழக்கத்தை விட சற்று குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடிக்கும்.
இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாகும்.
இந்த வித்தியாசம் நிலையான 24 மணிநேரத்தை விட 1.34 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது அண்மைய ஆண்டுகளில் வெளிப்படும் பூமியின் சுழற்சியின் ஒரு குழப்பமான போக்கின் ஒரு பகுதியாகும்.
இந்த நிலை தொடர்ந்தால், 2029 ஆம் ஆண்டில் அணு கடிகாரங்களிலிருந்து பூமியின் சுழற்சி ஒரு நொடியை இழக்க வேண்டியிருக்கும் – இது எதிர்மறை லீப் விநாடி என்று அழைக்கப்படுகிறது.
வழக்கமாக, பூமியின் சுழற்சி முடிவடைய சரியாக 86,400 வினாடிகள் அல்லது 24 மணிநேரம் ஆகும்.
ஆனால், அண்மைய ஆண்டுகளில் பூமியின் சுழற்சி வேகமாகி வருகிறது, அதற்கான காரணம் ஒரு மர்மமாகவே உள்ளது.
இருந்த போதும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள், உலகளவில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் நீர் அளவு மாற்றம், பூமியின் உலோக மையத்திற்குள் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் பலவீனமடையும் காந்தப்புலம் உள்ளிட்ட பல காரணிகளால் அதன் வேகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.














