எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த நபரின் பெற்றோர் இருவரும் கடந்த அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உடலங்கங்கள் என்றும் கூறப்பட்ட எச்சங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன.
‘எனினும் அதில் தனது தாயின் எச்சங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் காணப்பட்டதாக ‘ அவர்களது மகன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் உடல் எச்சங்களில், பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
எனினும், விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது எச்சங்களும் மிகவும் தொழில்முறை மற்றும் கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















