2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை 2,787 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை நடைபெற உள்ளது.
நாடளாவியரீதியில் உள்ள 2,787 பரீட்சை மையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதேவேளை பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 எனும் துரித இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திதகவல் வழங்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகளை கையாள்வதற்கு விசேட திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


















