மீகொடை பகுதியில் இன்று (12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான அவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.














