கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில், புறக்கோட்டை பழைய மீன் சந்தைக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














