ஐ.சி.சி ஆடவர் வீரர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளார்.
கெய்ர்ன்ஸில் செவ்வாயன்று (19) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மகாராஜ் மீண்டும் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மற்றும் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரை விட இரண்டு இடங்கள் முன்னேறினார்.
35 வயதான இந்த அனுபவ வீரர் தனது அனுபவத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 33 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப் பெறச் செய்வதற்கு உதவியது.
2023 நவம்பர் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜை பின்னுக்குத் தள்ளி மகாராஜ் முதன்முதலில் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளர் ஆனார்.
அன்றிலிருந்து அவர், தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பிடித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.















