இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று (29) ஆரம்பாகவுள்ளது.
அதன்படி, இந்த ஆட்டம் ஹராரேவில் அமைந்துள்ள ஹராரே விளையாட்டுக் கழகத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 01.00 மணிக்கு ஆரம்பமாகும்.
சிம்பாப்வே
சிம்பாப்வே அணி அண்மைய டெஸ்ட் தொடரில் ஏமாற்றமளிக்கும் முடிவினை பெற்றுள்ளது.
பெப்ரவரியில் அயர்லாந்தை வென்ற பின்னர், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதன்படி, சிம்பாப்வே அணியின் வெற்றி குறைந்து வருகிறது.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்த பின்னர், நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி:20 முத்தரப்பு தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
அணி அமைப்பைப் பொறுத்தவரை, பிரெண்டன் டெய்லரின் வருகை அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்மையாகும்.
ஏனெனில் அவர் தொடர்ந்து ஓட்டங்கள் எடுக்கும் திறனைக் கொண்டுள்ளார்.
அணித் தலைவர் கிரெய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் சிம்பாப்வே அணிக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள்.
ஏனெனில் அவர்கள் ஓட்டங்களை குவிக்க முயற்சிப்பார்கள்.
அதே நேரத்தில் ரிச்சர்ட் ந்காரவா மற்றும் பிளெசிங் முசரபானி ஆகியோரின் வருகை மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த சிக்கந்தர் ராசாவும் அணியில் உள்ளார்.
இலங்கை
இலங்கையைப் பொறுத்தவரை, அவர்கள் அண்மையில் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரை அதே விகிதத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
அணித் தலைவர் சரித் அசலங்க தனது துடுப்பாட்டம் மற்றும் தலைமைத்துவம் இரண்டிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதே நேரத்தில் அவரது நம்பிக்கையைப் பயன்படுத்தி ஒருநாள் வடிவத்தில் தங்கள் ஆதிக்கத்தை நீட்டிக்க அணி முயற்சிக்கும்.
இந்த அணியில் குசல் மெண்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் போன்ற வீரர்கள் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் துடுப்பாட்ட அனுபவத்தில் சிறந்த நிலையில் உள்ளனர்.
துஷ்மந்த சமீரவுடன் மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் பந்துவீச்சு வரிசையை பிரகாசமாக்குவார்கள்.
நேருக்கு நேர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரு அணிகளும் இதுவரை 64 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
அதில் இலங்கை அணி 49 வெற்றிகயைும், சிம்பாப்வே அணி 12 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.
மூன்று போட்டிகள் எதுவித முடிவும் இன்றி நிறைவுக்கு வந்துள்ளன.
ஆடுகள தன்மை
ஹராரேவில் அமைந்துள்ள ஹராரே விளையாட்டுக் கழகம் ஆடுகளம் சமநிலையானது.
அங்கு துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சுக்கு இடையே சமமான போட்டி இருக்க வாய்ப்புள்ளது.




















