தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது ”டூட்” “Dude” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த ”டூட்” திரைப்படத்தின் “ஊறும் பிளட்” எனும் முதல் பாடல் கடந்த 29 ஆம் திகதி வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”.
மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு , பால் டப்பா பாடல் வரிகளை உருவாக்கியுள்ளதுடன் சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ளார்.
இந்நிலையில், டூட் திரைப்படத்தின் எனும் முதல் பாடலை படக்குழு (29) ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா சாலையில் இப்பாடலின் நடன காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இப்பாடல் யூ.டி.யூ.பில் வெளியான சில மணிநேரங்களில் 2 இலட்சம் பார்வைகளைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















