தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மத்துகமவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் ஒரு சந்தேக நபரைக் கைது செய்ய பொது மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்துகம தோலஹேன வத்தைபகுதியில் சந்தேக நபர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து மத்துகமவைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591700 அல்லது 071-8591701 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 03 மில்லியன் மோசடி செய்த பெண்ணைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளது.
ஐந்து பெண்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இறக்குவானை பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
41 வயதான அந்தப் பெண் தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591394 அல்லது 071-8593808 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.















