நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் UDA இன் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் வீரவன்ச பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரசபைக்கு 29.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அரச அதிகாரிகள் இருவரும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 05, மயூரா பிளேஸில் அமைந்துள்ள 55.5 பேர்ச் நிலத்தை தற்காலிக அடிப்படையில் குத்தகைக்கு எடுத்ததாகவும், இதன் விளைவாக அரசாங்கத்திற்கு ரூ. 29,519,666.16 இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.















