சீனாவில் இடம்பெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றிரவு (15) சீனா நோக்கி புறப்பட்டுள்ளார்.
இதற்கமைய பொலிஸ் மா அதிபர் பதவியின் கடமைகளை முன்னெடுப்பதற்காக மத்திய மாகாண மற்றும் பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் அவர் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, சீனாவில் இடம்பெறும் பொலிஸ் மாநாட்டில் பிரியந்த வீரசூரிய உரையாற்றவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் அவர் பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 20ம் திகதி அவர் மீண்டும் நாட்டிற்கு வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















