எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி.
இந்த திரைப்படம் விஜய், ஜோதிகா ஜோடிக்கு தனியான ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொடுத்ததுடன்
இத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
விஜய்யின் திரைப் பயணத்தில் இப் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்படும் சின்னச் சின்ன சச்சரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் நிறைந்த திரைப்படம்.
கல்கத்தாவைச் சேர்ந்த சிவா என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார்.
குற்றாலம் பக்கத்தில் உள்ள பைம்பொழில் கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்தார்.
திரைப்படத்தில் சிவா மற்றும் ஜெனிபர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில், இருவரும் காதல் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும், திருமண வாழ்க்கையின் யதார்த்தத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதனால் குஷி திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் சுமார் 25 வருடங்களின் பின்னர் 4D முறையில் இப் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி இப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளமையால், படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


















