உத்தரவினை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் மாத்தறை, வெல்லமடம பகுதியிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த கார் ஒன்றினை குறித்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடையில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
எனினும், அந்த வாகனம் நிறுத்தாமல் பயணித்தமையினால், பொலிஸார் அதன் மீது பல முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கார், பின்னர் மாத்தறையில் உள்ள ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த நேரத்தில் வாகனத்திற்குள் இரண்டு பேர் இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் காரின் உரிமையாளரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இது சம்பவந்தமான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















