மேற்கு ஆசியாவில் மோதல்கள் திங்களன்று (02) தீவிரமடைந்த நிலையில், உலகளாவிய மோதல்களைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமைகள் புது டெல்லிக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பிராந்தியத்தில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் மோடி கூறினார்.
புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் கனடா பிரதமர் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான பெரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பல நாடுகள் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன.















