முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
மலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்ரம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஒரு அறிக்கையின் மூலமாக பொலிஸார் உறுதிபடுத்தினர்.
காயமடைந்த நிலையில் அவர் கிழக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மலபே பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மலபே பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
63 வயதாகும் சி.டி. விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை பணியாற்றியுள்ளதாகவும் பொலிஸாரின் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.












