பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (15) அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் பசறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண் மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பசறை பொலிஸால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














