அடிலெய்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று (23) ஆரம்பமான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சிரேஷ்ட வீரர் கோலி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமற்றத்தை அளித்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கோலி மீண்டும் இடம் பெற்றுள்ளதால், அவருக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் நாணயச் சுழற்சியில் வென்று இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஏழாவது ஓவரில் அணித் தலைவர் சுப்மன் கில்லை 7 ஓட்டங்களுக்கு இழந்தது.
அதன் பின்னர் கோலி களமிறங்கினார்.
எனினும், அவர் நீண்ட நேரம் ஆடுகளத்தில் தாக்குப் பிடிக்கவில்லை.
ஏனெனில், சேவியர் பார்ட்லெட் மூன்று பந்துகளில் எல்.பி.டபிள்யூ முறையில் எந்தவிதமான ஓட்டமின்றி விராட் கோலியை ஆட்டமிழக்க வைத்தார்.
பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கோலியை மிட்செல் ஸ்டார்க் எட்டு பந்துகளில் டக் அவுட்டாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.


















