பர்மிங்காமின் மையத்தில் பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டடின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருப்பு நிற பிரித்ததானிய நாட்டவரான (Djeison Rafael) டிஜைசன் ரஃபேல் எனும் குறித்த சந்தேகநபர் மேலும் இரண்டு கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என (West Midlands) வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலும், தகவல் அறிந்த எவரும் முன்வந்து தகவல் அளிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த 21 வயதுடைய சந்தேகநபர் சம்பவ தினத்தன்று சாம்பல் நிற டிராக்சூட், கருப்பு தொப்பி, பயிற்சியாளர்கள் அணியும் ஒரு பையை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான 30 வயதுடைய பெண், கழுத்தில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான ஏனைய குற்றங்கள் தொடர்பான தகவல்களை பெறவே பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர் குறித்த தகவல் அறிந்தவர்கள் 101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளையத்தினம் குறித்த சந்தேகநபர் பர்மிங்காமில் உள்ள நீதிபதிகள் முன்நிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல் குறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் (Shabana Mahmood ) ஷபானா மஹ்மூத் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து வேறு ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் முன்வந்து வாக்குமூலம் வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.


















