தென்கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தின் பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தார்.
லுவாலாபா மாகாணத்தின் முலோண்டோவில் உள்ள கலண்டோ சுரங்கத்தில் அமைந்துள்ள பாலமே சனிக்கிழமை இடிந்து வீழ்ந்தது.
சுரங்கப் பகுதியைப் பாதுகாத்து வந்த இராணுவ வீரர்களிடமிருந்து துப்பாக்கிச் சூடு வெடித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சுரங்கப் பகுதியில் பீதி பரவியபோது இந்த சோகம் வெளிப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



















