தன் காதல் மனைவியான நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசாக மீண்டும் விலை உயர்ந்த காரை வாங்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நேற்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு 10 கோடி இந்திய ரூபா பெறுமதியான ரோல்ஸ் ரோய்ஸ் black badge spectre கார் வாங்கி கொடுத்து நயன்தாராவை திக்குமுக்காட வைத்திருக்கிறார் அவரது கணவர் விக்னேஷ் சிவன.
அத்துடன், அந்த கார் மீது மகன்கள் உயிர், உலகை அமர வைத்து தானும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
காரை பார்த்ததுமே ஆளாளுக்கு கூகுளில் அதன் விலையை தேடிக் கண்டுபிடித்து ஷாக் ஆகிவிட்டார்கள்.
திருமணமான மறு ஆண்டில் இருந்து தொடர்ந்து கார்கள் வாங்கிக் கொடுக்கிறார் விக்னேஷ் சிவன்.
அவரின் இந்த செயல் நயன்தாராவை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது என்றே கூற வேண்டும்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த படம் ரிலீஸானது.
இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி முடித்திருக்கும் படம் LIK.
நயன்தாராவோ தெலுங்கு படங்களில் பிசியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















