ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் கொ*ல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று மூன்று வீரர்கள் கொ*ல்லப்பட்டதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்திருந்தது.
ஈரானின் ஆரம்பக்கட்ட தாக்குதல்களின் போது படுகாயமடைந்திருந்த அந்த நான்காவது வீரர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்வதுடன், அமெரிக்காவின் பதில் தாக்குதல் முயற்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எனினும் எந்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த இராணுவ வீரர் காயமடைந்தார் என்பது தொடர்பான விபரங்களை அமெரிக்க இராணுவம் வௌிப்படுத்தவில்லை.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் புலனாய்வு பிரிவு தலைமையகத்தின் தலைவரான ஹுசைன் மக்லெட் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா அமைப்பிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் வெளியாகவில்லை.
லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.















