ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பார்த்து பொறாமையாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று (21) தொடங்கியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரைப் பார்த்து பொறாமையாக இருப்பதாகவும், உலக டெஸ்ட் சம்பியனாக இருந்தும் இந்தியாவுக்கு எதிராக வெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே விளையாடுவதாகவும் தென்னாபிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் இந்தியாவுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என நம்புவதாகவும் இந்தியாவுக்கு எதிராக தாம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



















