பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.
அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார்.
பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர்.
இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம் சாட்டப்பட்டவர் தனது அனுமதியின்றி ரகசியமாக பதிவு செய்ததாக இலங்கை மாணவி தனது பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
தனது தனிப்பட்ட வீடியோக்களை எடுத்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு ஈடாக பணம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



















