ஈரான் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான கடுமையான தாக்குதல்களால், அந்நாட்டின் புகழ்பெற்ற அசாதி சர்வதேச கால்பந்து மைதானம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, பல ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளின் முக்கிய மையமாக விளங்கிய இந்த மைதானம், தாக்குதலுக்கு உள்ளானதில் அதன் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள காணொளி காட்சிகளின்படி, மைதானத்தின் பார்வையாளர் அரங்கம் மற்றும் கட்டிடத் தொகுதிக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.















