பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற முத்தரப்பு ரி20 கிரிக்கெட் தொடரின் இன்று 06ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
நடத்தவுள்ளன. இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவேண்டும் எனில் இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாகிஸ்தானுடன் மோதிய போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தது. இதேவேi பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் இலங்கை அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியான போட்டியாக கருதப்படுகின்றது.
இதேவேளை ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றிருந்தது. இன்னிலையில் இன்றைய போட்டி இலங்கை வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடவேண்டுமாக இருந்தால், இலங்கை எஞ்சியுள்ள பாகிஸ்தானுடனான இரண்டாம் கட்டப் போட்டியிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திலுள்ளது.



















