இங்கிலாந்தில் மக்களிடையே காச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்,
சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாடு சாதாரணமாக இருப்பதை விட வேகமாக உருவானதாகவும், இதனால் பொது மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.
இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) இளைஞர்களிடையே தொடங்கிய இந்தத் தொற்றுநோய் தற்போது பாதிக்கப்படக்கூடிய வயதானவர்களுக்கும் பரவுவதாகக் கவலை தெரிவிக்கிறது.
இதேவேளை, தேசிய சுகாதார சேவை (NHS) எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக இது இருக்கும் என்று கூறும் நிபுணர்கள், காய்ச்சல் உச்சத்தை அடையும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 8,000 வரை உயரக்கூடும் என கணிக்கின்றனர்.
காய்ச்சலினால் ஏற்படும் விளைவுகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும் காச்சலுக்கான சாதாரண அறிகுறிகள் தென்பட்டாலும் நோயாளர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனைகளை பெறவேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
















