கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுகைகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல்)பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (12) காலை தெரிவித்தார்.
ஜின் கங்கை, களுகங்கை, களனி கங்கை மற்றும் யான் ஓயா படுகைகளின் மேல் பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 50 மில்லி மீட்டருக்கு அருகில் மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால், சில ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, இருப்பினும் அவை வெள்ள மட்டத்திற்கு கீழே உள்ளது என்றும் கூறினார்.
இதனால், சுமார் 34 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிகின்றன.
அதன்படி, தெதுரு ஓயா, ராஜாங்கனை, நாச்சதுவ, யான் ஓயா, பதவிய, லுனுகம்வெஹெர மற்றும் சேனநாயக்க சமுத்திரம் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் மட்டங்களைக் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.















