பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு தியாகராஜநகரில் அமைந்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த சந்திப்பு சுமார் 1.00 மணிநேரம் நேரம் நீடித்தது.
இதன்போது, தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படவும்
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவதனை தடுத்து நிறுத்தவும் சமஷ்டி யாப்பு உருவாக்கப்படவும் இலங்கை அரசை வலியுறுத்துமாறும்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்
இந்திய மத்திய அரசை வலியுறுத்த பாஜாக மாநிலதலைவராகிய தாங்கள் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொன்னுத்துரை – ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், செல்வராசா கஜேந்திரன் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், செயலாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தருமலிங்கம் சுரேஸ்
தேசிய அமைப்பாளர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நடராஜர் காண்டீபன் – (சிரேஸ்ட சட்டத்தரணி), பிரசாரச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியோர் அடங்குவர்.















