பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள ஐசிசியின் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அறிவித்துள்ளது.
இந்திய அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளமை பிரதான பேசி பொருளாக உள்ளது.
அதேநேரம், இந்தப் போட்டிக்கு அக்சர் படேல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக் கிண்ணத்துக்கு ஆயத்தமாக எதிர்வரும் ஜனவரி 21 முதல் 31 வரை நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இதே அணி இடம்பெறும் என்றும் BCCI அறிவித்துள்ளது.
மும்பை தலைமையகத்தில் நடைபெற்ற BCCI இன் தேர்வுக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து அணி இறுதி செய்யப்பட்டது.
BCCIசெயலாளர் தேவஜித் சைகியா ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் அணி விபரத்தை அறிவித்தார்.
அதன் பின்னர் அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.

















