அடிலெய்டில் நடந்த மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டமான இன்று அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த வெற்றியுடன் ஆஷஸ் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இன்னமும் மீதமுள்ள நிலையில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியினர் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சிஸில் அவுஸ்திரேலியா 371 ஓட்டங்களை குவித்த நிலையில் இங்கிலாந்து 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 86 ஓட்டங்களுடன் முன்னிலை வகித்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 349 ஓட்டங்களை எடுத்தது.
இதனால், இங்கிலாந்தின் வெற்றிக்கு 435 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி போட்டியின் 5 ஆம் நாளான இன்று 102.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 352 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
போட்டியின் ஆட்டநாயகனாக அலெக்ஸ் கேரி தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று தொடங்குவதுடன், இறுதியும் ஐந்தாவதுமான டெஸ்ட் போட்டி 2026 ஜனவரி 4 அன்று தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















