மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுரங்கி 1 – என்ற பல நாள் மீன்பிடி படகே கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகவும், மேலும் அதில் 5 மீனவர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இறுதியாக டிசம்பர் 6 ஆம் திகதி படகில் பயணித்தவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அன்றிலிருந்து அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.














