உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக சடடமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உட்பட ஏராளமான போராட்டக்காரர்கள் இன்று டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெளியே பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை நிறுத்துங்கள் என முழக்கங்களை எழுப்பினர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர் யோகிதா பயானா மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே, உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மத்திய புலனாய்வுப் பணியகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
















