இஸ்லாமியக் குடியரசின் மீதான மற்றொரு பாரிய தாக்குதலை வொஷிங்டன் ஆதரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ஈரானுடான மோதலைத் தவிர்க்குமாறு ரஷ்யா செவ்வாயன்று (30) அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியது.
புளோரிடாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் திங்களன்று பேசிய ட்ரம்ப், ஜூன் போரிலிருந்து ஈரான் இராணுவ ரீதியாக மீண்டால் அமெரிக்கா கடுமையாகத் தாக்கும் என்றும், ஈரான் ஏவுகணை வளர்ச்சியைத் தொடர்ந்தால் இஸ்ரேலிய தாக்குதல்களை ஆதரிப்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் விரைவில் ஒழித்து முறியடிப்போம் என்றும் அச்சுறுத்தினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது, அதற்காக ட்ரம்ப் 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தார்.
ஜூன் 13 அன்று 61 ஆவது நாளில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், இஸ்ரேல் ஒரு திடீர் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஜூன் 22 அன்று இஸ்ஃபஹான், நடான்ஸ் மற்றும் ஃபோர்டோவில் உள்ள முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் அணு விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஈரானிய எதிர் தாக்குதல்களில் 32 இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டனர்.
உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து மொஸ்கோ தெஹ்ரானுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இஸ்லாமிய குடியரசுடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதன் அணு ஆயுதத் திட்டங்களை மறுத்துள்ளது.
அதன் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக என்று கூறுகிறது. அதே நேரத்தில் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தவும் ஏவுகணை திறன்களைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்க கோரிக்கைகளை ஈரானிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதனிடையே, உக்ரேனில் போர் தொடங்கியதிலிருந்து மொஸ்கோ தெஹ்ரானுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இஸ்லாமிய குடியரசுடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.














