நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) நேற்று (30) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் 2026 ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்தது.
ஜோஹன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் லங்கா சதோசாவிற்குச் சொந்தமான லொறி மற்றும் பிற வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குருணாகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை அதே குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.















