இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (31) அறிவித்துள்ளது.
இந்த அணியை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ரஷித் கான் வழிநடத்தவுள்ளார்.
அதே அணி, டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடும்.
காயம் காரணமாக ஓய்விலிருந்த குல்படின் நைப் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரும் 15 பேர் கொண்ட இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
2026 டி20 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கனடாவுடன் இணைந்து டி பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளது.


















