2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் நிலவும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பயண தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் 30 சென்டிமீட்டர் வரை பனி குவியக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பனிக்கட்டிகளால் நழுவி விழும் அபாயம் இருப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் முக்கிய சாலைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த அதீத குளிர் காலநிலை மற்றும் பலத்த காற்றினால் மின்சாரம் மற்றும் பயண சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பனிப்புயல் சூழலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.















