2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது
இதனிடையே நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று பாடசாலைகளை துப்புரவு செய்யும் பணிகள் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

















