டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு மத்தியநிலையங்களாக செயற்படும் சுமார் 100 பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பாடசாலைகளில் கல்விபயின்றுவந்த மாணவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று கல்விபயில முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வீதிகட்டமைப்புக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

















