பருத்தித்துறை நீதிமன்றத்தினால் 600Kg கஞ்சா அழிக்கும் நடவடிக்கை இன்று(04) இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரளாக் கஞ்சா பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்ற்படுத்தப்பட்ட 600kg வரையான கஞ்சா பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் கஞ்சா அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
பருத்தித்துறை நகரசபைக்குச் சொந்தமான வெலிக்கண்டி குப்பை திடலில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.















