அமெரிக்காவினால் நேற்றையதினம் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) கண்டனம் தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெறிவித்துள்ளது.
இதேவேளை, சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை கடத்திச் சென்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய சுதந்திர, இறைமையுள்ள நாடுகளைப் போலவே வெனிசுலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது எனவும், அதனை மீறுவதற்கு எந்தவொரு சக்திக்கும் உரிமை இல்லை எனவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














