இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 107 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (04) நாட்டினார்.
அத்துடன், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளுக்கமைய கொடக்கவெல பிரதேச சபைக்குட்பட்ட இறக்குவானை வடக்கு, பெரிய பாராவத்தை, ஸ்ப்ரிங்வூட் தமிழ் வித்தியாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பாதை சுமார் 150இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டீல் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் (04/01) பொது மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் திறந்து வைத்தார்.
இதன் போது பிரதி அமைச்சர் அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தின் பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாதைகளை புணரமைப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைய மாவட்டத்திலே 87 தோட்டப்பிரதேசங்களிலே காணப்படுகின்ற வீதிகளை புணரமைக்கும் பணிகள் இடம் பெற்று கொண்டிருப்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் கொடக்கவெல பிரதேச சபை தவிசாளர் குலரத்ன தந்தெனிய, பிரதேச சபை உறுப்பினர்களான அப்துல்லா ராஜமாணிக்கம், நிமந்திகா பெரேரா மற்றும் இறக்குவானை தே.ம.ச பிரதேச அமைப்பாளர் குமுது ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.















