சீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்த அவர், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை இரட்டிப்பாக்கி, ஆர்க்டிக் பிரதேசத்தை கையகப்படுத்துவது நேட்டோவை வருத்தப்படுத்தினாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.
வொஷிங்டனுக்குத் திரும்பும் போது எயார்போர்ஸ் வன் (Air Force One) கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது செய்தியாளர்கள், கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதால் நேட்டோ கூட்டணி உடையுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், நேட்டோவை இந்த விடயம் பாதிக்கும் என்பதையும் ஒப்புக்கொண்டார். இருப்பினும் நேட்டோ ஏனையவர்களை விட அமெரிக்காவிற்கு அதிகம் தேவை என்றும் கூறியுள்ளார்.
‘நாம் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா எடுக்கும். நான் அதை நடக்க விடப் போவதில்லை… எப்படியிருந்தாலும், நமக்கு கிரீன்லாந்து கிடைக்கும்,’ என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
















