இலங்கையின் திரைப்படம் மற்றும் அனிமேஷன் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாட்டின் அனிமேஷன் திரைப்படமான “The Secret of the Moonstone” டிரெய்லரை மோகோ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
விரைவில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் கதை, லக்கி என்ற இளம் பையனும் அவனது சிறந்த தோழி டானியாவும் இலங்கையின் மாயக் காடுகளுக்குள் ஒரு உயர் சாகசப் பயணத்தை மேற்கொள்வதைப் பின்தொடர்கிறது.
லக்கியின் மூதாதையரான மஹாதேன முத்தாவின் சொத்துக்களாக இருந்த தொலைந்து போன ஞான புத்தகத்தைக் கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கமாகவுள்ளது.
இந்தப் பண்டைய புத்தகம் ஒரு மாயாஜால உயிரினத்தால் பாதுகாக்கப்படுகிறது.
அவர்களின் பயணம் விரிவடையும் போது, இலங்கையின் வளமான மற்றும் பண்டைய காடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் தொழில்நுட்ப மனிதர்களுடானான போராட்டமும் எடுத்துக் காட்டப்படுகிறது.
















